2013-12-07 15:37:20

இலங்கையில் சிறுபான்மை மதத்தவர்க்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பு


டிச.07,2013. இலங்கையில் சிறுபான்மை மதத்தவர்க்கெதிரான வெறுப்புணர்வும் வன்முறைகளும் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் கிறிஸ்தவ மற்றும் அரசு-சாரா அமைப்புகள் கூறுகின்றன.
சிறுபான்மை மதத்தவர் இலங்கை மக்கள்தொகையில் 30 விழுக்காட்டினராக இருக்கும்வேளை, 2013ம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில், புத்தமதத் தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்க்கெதிரான 65 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என, இலங்கையின் தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பு கூறியது.
இலங்கையில் மதச்சகிப்பற்றதன்மை அதிகரித்து வருவதை அந்நாட்டில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனத உரிமைகள் அவைத் தலைவர் நவிபிள்ளை குறிப்பிட்டதாகவும் அக்கூட்டமைப்பு தெரிவித்தது.
இலங்கையில் புத்தமதத்தினர் 70 விழுக்காட்டினர், இந்துக்கள் 12 விழுக்காட்டினர், முஸ்லீம்கள் 10 விழுக்காட்டினர் மற்றும் கிறிஸ்தவர்கள் 7.5 விழுக்காட்டினர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.