2013-12-05 16:49:45

சொந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கு ஆபத்தைத் தோற்றுவிக்கும் நாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது


டிச.,05,2013. தங்கள் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கு ஆபத்தைத் தோற்றுவிக்கும் நாடுகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 20லிருந்து 34ஆக உயர்ந்துள்ளதாக உலக அளவில் ஆபத்துக்கள் பற்றி பகுப்பாய்வு செய்யும் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரிட்டனிலிருந்து இயங்கும் 'மேப்பிள்க்ராப்ட்' என்ற இந்நிறுவனம் நடத்திய ஆய்வில், குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கப் பகுதியிலேயே இந்த அதிகரிப்பு நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சிரியாவும் சூடானும் இந்தப் பட்டியலின் மேல் இடங்களில் இடம்பெறுகின்றன.
இந்த 34 நாடுகளில் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும், கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.