2013-12-05 16:35:17

சமயவிடுதலை மீதான கட்டுப்பாடுகள் சமூகநீதிக்காக உழைக்கும் குழுக்களுக்கு ஊறு விளைவிக்கின்றன


டிச.05,2013. சமயவிடுதலை மீதான கட்டுப்பாடுகள் சமூகநீதிக்காக உழைக்கும் குழுக்களுக்கு ஊறு விளைவிக்கின்றன என்பதால் அதன்வழி ஏழைகளும் பாதிக்கப்படுகின்றனர் என்றார் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர் வில்லியம் லோரி.
சமயவிடுதலையை விட்டுக்கொடுத்துத்தான் ஏழைகளின் தேவைகளை நிறைவேர்றவும், உண்மையான மனிதகுல முன்னேற்றத்துக்கும் உழைக்க முடியும் என்பது தவறான கண்ணோட்டம் என்ற பால்டிமோர் பேராயர் லோரி, ஏழைகளுக்கு உதவுவதற்கான கிறிஸ்தவ அழைப்புக்கும், சமயவிடுதலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது எனவும் எடுத்துரைத்தார்.
ஏழைகளுக்கு உதவுவதல் என்பது நற்செய்தி அறிவித்தலின் இதயத்திற்குச் செல்கிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டிய பேராயர் லோரி, சமய சுதந்திரம் தாக்கப்படும்போது ஏழைகளுக்கு உதவும் மதங்களின் சக்தியும் பாதிக்கப்படுகிறது என மேலும் கூறினார்.
மனித மாண்புக்கு சமய சுதந்திரம் இன்றியமையாதது என மேலும் எடுத்துரைத்தார் பால்டிமோர் பேராயர் லோரி.

ஆதாரம் : EWTN








All the contents on this site are copyrighted ©.