2013-12-04 16:58:14

இலங்கை குறித்த அனைத்துலகòd சமுதாயத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டு, அமெரிக்கா எச்சரிக்கை


டிச.04,2013. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் களைவதற்கும், ஒப்புரவை நோக்கிய நடவடிக்கையைத் தொடங்குவதற்கும் அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்ஷ முயற்சிக்காவிடில், அந்நாட்டின்மீதான அனைத்துலக சமுதாயத்தின் பொறுமை இழக்கப்படும் என எச்சரித்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு.
இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விரைவில் நியாயமான, வெளிப்படையான விசாரணையைld துவக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது அமெரிக்கா.
கடந்த 30 ஆண்டுகளாக நடந்த மோதல்களின் போதும், 2009ம் ஆண்டின் போரின்போதும் இறந்தவர்கள் குறித்த எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணியை இலங்கை அரசு துவக்கியுள்ள சூழலில், மனித உரிமைகள் குறித்த விசாரணை விவகாரத்தில், பிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்காவும் இலங்கை அரசை கடுமையாக எச்சரித்துள்ளது.
இலங்கையில் நடந்த மனித மீறல்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், மீள்குடியேற்றத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவும், பன்னாட்டு அளவில் உள்ள அதன் நட்பு நாடுகளும் எதிர்பார்க்கின்றன என, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் கூறியுள்ளார்.

ஆதாரம் : The Hindu







All the contents on this site are copyrighted ©.