2013-12-04 16:53:03

ஆப்ரிக்காவின் வளர்ச்சி குறித்த வத்திக்கான் கருத்தரங்கு


டிச.04,2013. ஆப்ரிக்காவுக்குச் செல்பவர்கள் முதலீடு செய்வதற்கு மட்டும் செல்லாமல், அக்கண்டத்தில் தொழிற்சாலைகளையும் உருவாக்கவேண்டியது மிகவும் முக்கியம் என, காங்கோ குடியரசின் கின்ஷாசா பேராயர் கர்தினால் LAURENT MONSENGWO PASINYA கூறினார்.
ஆப்ரிக்காவின் வளர்ச்சி குறித்த வத்திக்கானின் அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் PASINYA, ஆப்ரிக்காவில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டால், அக்கண்டத்தின் இயற்கை வளங்கள் மாற்றப்படும் மற்றும் இத்தொழிற்சாலைகள் ஐரோப்பாவில் விரிவுபடுத்தப்படும்போது செலவும் குறையும் எனக் கருத்து தெரிவித்தார்.
மேலும், நிறைய இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் கொண்டுள்ள ஆப்ரிக்காவின் உறுதியான பொருளாதாரத்துக்கு இவ்வளங்களை ஒன்றிணைக்க வேண்டியது இன்றியமையாதது என்று இக்கருத்தரங்கில் கலந்துகொண்டோர் கருத்து தெரிவித்தனர்.
உலகின் ஐந்து கண்டங்களில் மிகக் குறைவான மனித முன்னேற்றத்தைக் கண்டுள்ள கண்டம் ஆப்ரிக்கா எனவும், உலகில் 187 நாடுகளில் மனித முன்னேற்றம் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் காங்கோ குடியரசும், நைஜரும் கடைசி இடங்களில் உள்ளன எனவும் ஐ.நா. கூறியுள்ளது.
காங்கோ குடியரசு சண்டையாலும், நைஜர் வறட்சியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.