2013-12-03 15:20:33

தாய்லாந்தில் கத்தோலிக்கத் தொழிலதிபர்களின் அனைத்துலக கருத்தரங்கு


டிச.03,2013. புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பதில் தொழிலதிபர்களின் அழைப்பும், கத்தோலிக்கச் சமூகப் போதனைகளும் என்ற தலைப்பில் கத்தோலிக்கத் தொழிலதிபர்களின் அனைத்துலக கருத்தரங்கு ஒன்று வருகின்ற மார்ச் மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறவுள்ளது.
நிச்சயமற்ற உலகப் பொருளாதாரத்தில் கத்தோலிக்கத் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் தடுமாற்றங்கள் குறித்துப் பரிசீலனை செய்யவும், அவர்களின் கத்தோலிக்க விசுவாசத்தை உறுதிப்படுத்தவும் இந்த கருத்தரங்கு உதவும் என, தாய்லாந்து ஆயர் பேரவையின் உதவி பொதுச் செயலர் பேரருள்திரு Andrew Vissanu Thanya Anan கூறினார்.
பாங்காக்கின் Royal Orchid Sheraton பயணியர் விடுதியில் 2014ம் ஆண்டு மார்ச் 20 முதல் 22 வரை நடைபெறவிருக்கும் இந்த அனைத்துலக கருத்தரங்கில், தொழிலதிபரின் அழைப்பு என்ற தலைப்பில், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் உரையாற்றுவார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.