2013-11-29 15:07:57

இலத்தீன் அமெரிக்கா உலகுக்குத் தனது மேலான பங்களிப்பை வழங்க முடியும், கர்தினால் Filoni


நவ.29,2013. நற்செய்தி இன்னும் அறிவிக்கப்படாத பகுதிகள், அண்மையில் நற்செய்தியை அறிந்த பகுதிகள், இன்னும் போதுமானஅளவு நற்செய்தியைப் பெறவில்லை என உணரப்படும் பகுதிகள் ஆகியவற்றில் நற்செய்தியை அறிவிக்க வேண்டியது அனைத்துத் தலத் திருஅவைகளின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டினார் கர்தினால் Fernando Filoni.
வெனெசுவேலா நாட்டின் Maracaiboல் 4வது அமெரிக்க மறைபோதக மாநாடு மற்றும் 9வது இலத்தீன் அமெரிக்க மறைபோதக மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய, திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Filoni, விசுவாசமும், மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பும் இக்காலத்தில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன எனவும் குறிப்பிட்டார்.
இலத்தீன் அமெரிக்காவிலிருந்து முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் மறைபோதக நடவடிக்கைகள் பற்றியும், மறைபோதகத் திருஅவையின் முதல்பணி நற்செய்தியை அறிவிப்பது என்பதையும் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார் என்றுரைத்தார் கர்தினால் Filoni.
அமெரிக்கத் திருஅவை, நற்செய்தி அறிவிப்பில் இன்னும் அதிகம் தனது பங்களிப்பை அளிக்க முடியும் எனவும், ஏழ்மையின் பல வடிவங்கள் நிலவும் இக்கண்டத்தில் தனது விசுவாசத்தைப் பகிர்ந்துகொளள இயலா அளவுக்கு யாரும் ஏழை கிடையாது எனவும் இம்மாநாட்டில் கூறினார் கர்தினால் Filoni

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.