2013-11-28 15:47:49

கென்யாவில் இனமோதல்களை முடிவுக்குக்கொணர அரசின் தலையீட்டை வேண்டியுள்ளார் அந்நாட்டு ஆயர்


நவ.28,2013. கென்யாவின் வடமேற்குபகுதியில் இனங்களிடையே இடம்பெற்றுவரும் மோதலகளை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
கென்யாவின் வடமேற்கு பகுதியில் எரிசக்தி எண்ணெய்வளம் இருப்பதாக கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அப்பகுதியிலுள்ள Turkana மற்றும் Pokot சமூகங்களிடையே நிலஉரிமைகள் குறித்த மோதல்கள் அதிகரித்திருப்பது குறித்த கவலையை வெளியிட்ட கென்யாவின் Lodwar மறைமாவட்ட ஆயர் Dominic Kimengich, எண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்டது, மோதல்களுக்கான காரணம் என்பதை மறுக்க முடியாது என்றார்.
மேய்ச்சல் நிலங்கள் இன்மையாலும் தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் துன்புறும் கென்யாவின் வடமேற்குப் பகுதியில் எண்ணெய்வளக் கண்டுபிடிப்பிற்குப்பின்னர் வருமானம் குறித்த சிந்தனையால் மோதல்கள் துவங்கியுள்ளன எனவும் எடுத்துரைத்தார் ஆயர் Kimengich.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.