2013-11-26 15:56:01

இந்தியாவில் 278 பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கு மத்திய அரசு முடிவு


நவ.26,2013. இந்தியாவில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.
பெங்களூருவில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற அகில இந்திய உயர்கல்வி துறை அமைச்சர்கள் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி அஷோக் தாகூர், மத்திய அரசின் முதன்மைத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 278 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன என்றார்.
இவை, 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் திறக்கப்படவுள்ளன. மேலும், தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : PTI








All the contents on this site are copyrighted ©.