2013-11-21 15:23:45

தென் பிலிப்பீன்சில் அமைதிக்கான நடவடிக்கைகளில் இடைநிலை வகிக்க அந்நாட்டு சமயத் தலைவர்கள் ஆர்வம்


நவ.21,2013. தென் பிலிப்பீன்சில் அமைதிக்கான நடவடிக்கைகளில் இடைநிலையாளர்களாய்ச் செயல்படுவதற்கு அந்நாட்டு ஆயர்களும் Ulema இஸ்லாமியத் தலைவர்களும் முன்வந்துள்ளனர்.
Mindanao தீவு ஆயர்களுக்கும், இஸ்லாமியத் தலைவர்களுக்கும் இடையே Zamboangaவில் இடம்பெற்ற 41வது கூட்டத்தில் இவ்வாறு இவ்விரு மதத் தலைவர்களும் முன்வந்துள்ளனர் என, பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
"Sisilah" என்ற உரையாடலுக்கான இயக்கம் நடத்திய இக்கூட்டத்தில் கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், முஸ்லீம்கள் என 22 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Mindanao தீவில் இடம்பெறும் பிரச்சனைகளின் அடிப்படைக் காரணங்களைக் கண்டுணர்ந்து அமைதிக்கான பேச்சுவார்த்தையில் இடைநிலை வகிப்பதற்கு இப்பிரதிநிதிகள் முன்வந்துள்ளனர்.
இக்கூட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள் சார்பில் கலந்துகொண்ட ஆயர் Fernando Capalla கூறுகையில், சமயத் தலைவர்கள் காவல்துறையின் சக்தி கொண்டவர்கள் அல்ல, ஆயினும், அவர்களால் பல்வேறு குழுக்களை ஒன்றிணைத்து பேச்சுவார்த்தையில் அமரச்செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.