2013-11-21 15:21:10

திருப்பீட நலவாழ்வுப்பணி அவையின் 28வது அனைத்துலகக் கருத்தரங்கு துவங்கியது


நவ.21,2013. “வயதான நோயாளிகளுக்கான பணியில் திருஅவை : நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சை” என்ற தலைப்பில், திருப்பீட நலவாழ்வுப்பணி அவை ஏற்பாடு செய்த 3 நாள் கருத்தரங்கு இவ்வியாழனன்று காலை வத்திக்கானில் துவங்கியது.
இதன் நிறைவு நாளான வருகிற சனிக்கிழமை காலையில் இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், நோயாளிகள் மற்றும் இத்திருப்பீட அவையின் உறுப்பினர்கள் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து செபம் மற்றும் தியானத்தில் ஈடுபடுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீட நலவாழ்வுப்பணி அவையின் இந்த 28வது அனைத்துலகக் கருத்தரங்கில், இந்தியா, அமெரிக்கஐக்கியநாடு, சுவிட்சர்லாந்து, போலந்து,இத்தாலி, வத்திக்கான், ஜெர்மனி, டன்சானியா, புர்கினோ ஃபாஸோ, பிரான்ஸ், பிரிட்டன், டென்மார்க், இஸ்ரேல், காங்கோ குடியரசு, ஆஸ்திரேலியா, சிலே, பொலிவியா, உகாண்டா, அர்ஜென்டீனா, இஸ்பெயின் உட்பட 57 நாடுகளிலிருந்து, அறிவியல் ஆய்வாளர்கள், மருத்துவர்கள், திருஅவையின் நலவாழ்வுப் பணியில் உள்ளோர் என ஏறக்குறைய 700 பேர் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.