2013-11-20 15:58:40

திருத்தந்தை பிரான்சிஸ் பற்றி அபூர்வ வகை தோல் நோயாளி ஒருவரின் பகிர்வு


நவ.20,2013. நியுரோபிப்ரோமேடோசிஸ்(neurofibromatosis) என்ற அபூர்வ வகை தோல் நோயால் பாதிக்கப்பட்ட இத்தாலியர் ஒருவர், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கட்டித்தழுவி முத்தமிடப்பட்டபோது விண்ணகத்தில் இருந்ததாக உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
வட இத்தாலியின் விச்சென்சா நகருக்கு அருகில் சிறிய கிராமம் ஒன்றில் வாழும் 53 வயது Vinicio Riva என்ற இந்நோயாளி இந்த தனது அனுபவத்தை Corriere della Sera என்ற இத்தாலிய நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உடம்பெல்லாம் கட்டியாக இருக்கும் இந்நோயாளியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வித தயக்கமுமின்றி வாரி அணைத்து முத்தமிட்டு, முகத்தைத் தடவிக்கொடுத்தபோது தான் அவரது அன்பை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Vinicio Riva போலவே இவரது தங்கையும் இதே நோயால் தாக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.