2013-11-16 15:17:18

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் குடிமக்கள் அனைவரும் ஒன்றித்திருக்க வேண்டும்,இஸ்லாமபாத் ஆயர்


நவ.16,2103. பயங்கரவாத வன்முறைக்குப் பலியாகிவரும் பாகிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்கு குடிமக்கள் அனைவரும் ஒன்றித்திருக்க வேண்டும் மற்றும் நாட்டுக்காகத் தொடர்ந்து செபிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் அந்நாட்டின் இஸ்லாமபாத் ஆயர் ரூஃபின் அந்தோணி.
பாகிஸ்தான் நாடு, பயங்கரவாத வன்முறைக்குப் பலியாகிவருவதால் நாட்டின் மக்கள் அனைவரும் அரசோடும், நாட்டின் ஆயுதம் தாங்கிய சக்திகளோடும் மிக நெருக்கமாக இருந்து செயல்பட வேண்டுமெனவும் கூறினார் ஆயர் ரூஃபின்.
தனியாள்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வு காவு கொடுக்கப்பட்டுள்ளது எனவும், தலிபான்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்ற சண்டையில் பேஷ்வாரில் கடந்த செப்டம்பரில் கிறிஸ்தவர்கள் கொடுல்லப்பட்டுள்ளனர் எனவும் இஸ்லாமபாத் ஆயர் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தாக்குதலில் இம்மாதம் முதல் தேதி, பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவர் Mashud Hakim Ullah கொல்லப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும், இசுலாமிய தீவிரவாத அமைப்புக்கும் இடையே இடம்பெறுவதாய் இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் இஸ்லாமபாத் ஆயர் ரூஃபின்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.