2013-11-16 15:21:30

இந்தியாவில் சிறார் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை


நவ.16,2103. ஊட்டச்சத்துப் பற்றாக்குறை மற்றும் தடுத்துநிறுத்தக்கூடிய நோய்களால் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான சிறார் இறக்கும்வேளை, சிறார் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை என்று அன்னை தெரேசா சிறார் அமைப்பின் தலைவர் Sajan George Kavinkalath தெரிவித்தார்.
சமூக நீதியின் முதல் பணி சிறாரின் வாழ்வைப் பாதுகாத்தல் என்றுரைத்த Kavinkalath, இளம் பிச்சைக்காரர்கள், நிலையான இருப்பிடமின்றி தெருவில் திரிபவர்கள், கால் ஊனமுற்றோர், திட்டமிட்ட குற்ற நிறுவனங்களுக்கு அடிக்கடி பலியாகுவோர் போன்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பதாகவும் கூறினார்.
சமுதாயத்தின் இந்நிலையை தடுப்பதற்கும், சிறாரைப் பாதுகாப்பதற்கும் தவறும் ஒரு சமுதாயம் குற்றவாளியே என்று பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய Kavinkalath, நம் வருங்காலக் கண்ணோட்டம், புதிய தலைமுறைகளுக்கு நாம் கொடுக்கும் அக்கறை மற்றும் மதிப்பீட்டைப் பொருத்தது என்றும் கூறினார்.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வியே இந்தியா எதிர்நோக்கும் முதல் சவால் என்றும், மற்றவை சிறாரின் நலவாழ்வு மற்றும் வளர்ச்சி என்றும் Kavinkalath கூறினார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.