2013-11-15 15:27:38

மிக அதிக செல்வாக்குள்ள 50 யூதர்களின் பட்டியலில் திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.15,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிக அதிக செல்வாக்குள்ள 50 யூதர்களின் பட்டியலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
Jewish Daily Forward என்ற அமெரிக்க வெளியீட்டில் வெளியிடப்பட்டுள்ள மிக அதிக செல்வாக்குள்ள 50 யூதர்களின் பட்டியலில் யூதர்கள் அல்லாத இருவர் இடம்பெற்றுள்ளனர்.
யூதர்கள்மீது மரியாதை கொண்டிருப்பவர் மற்றும் யூதக் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்பவர் என்று சொல்லி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
அர்ஜென்டீனாவின் யூத ராபி Abraham Skorka என்பவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெருங்கிய நண்பர். மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து பல்சமய உரையாடல் பற்றி புவனோஸ் ஐரெஸ் நகரில் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளனர் மற்றும் இவ்விருவரும் சேர்ந்து, “வானகமும் வையகமும்” என்ற நூலையும் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Romereports







All the contents on this site are copyrighted ©.