2013-11-14 16:11:40

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் இணையதளத்தில் முதல் இடம், புதிய ஆய்வு


நவ.14,2013. இந்த 2013ம் ஆண்டில் இதுவரை இணையதளத்தில் அதிகளவு இடம்பெற்ற பெயர்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் முதல் இடத்தில் இருப்பதாக, ஒரு புதிய உலகளாவிய ஆய்வு கூறுகின்றது.
டுவிட்டரில் அதிகளவு குறிப்பிடப்படும் வார்த்தைகளிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் உயர்நிலையில் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
Edward Snowden, Kate Middleton, Miley Cyrus ஆகியோரைவிட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றியே அதிகமான மக்கள் இணையதள உரையாடலில் பேசியுள்ளனர் என, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸை மையமாகக் கொண்ட Global Language Monitor என்ற நிறுவனம் எடுத்துள்ள 14வது ஆண்டு ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி blogs, சமூக வலைத்தளங்கள், 2,75,000 எலெக்ரானிக் மற்றும் இணையதள செய்தி ஊடகங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என, இந்த ஆய்வு மையத்தின் Burke கூறியுள்ளார்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.