2013-11-14 16:12:15

கடல் மட்டங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவதால், 2013ம் ஆண்டு அதிகமான வெப்பநிலையைக் கொண்டிருக்கும், ஐ.நா.


நவ.14,2013. உலகின் வெப்பநிலை குறித்து பதிவு செய்யத் தொடங்கப்பட்ட 1850ம் ஆண்டுக்குப் பின்னர், வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ள 10 ஆண்டுகளில் தற்போதைய 2013ம் ஆண்டும் சேர்க்கப்பட்டுள்ளது என்று உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டில் இதுவரையுள்ள வெப்பநிலை, 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை இதே காலத்தில் இருந்த வெப்பநிலை போல உள்ளது எனக் கூறும் WMO என்ற இந்நிறுவனத்தின் பொதுச் செயலர் Michel Jarraud, 1998ம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாண்டு வெப்பம் அதிகமாகவுள்ள ஆண்டாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் குவியலும், பிற பசுமை இல்ல வாயுக்களின் அளவும் 2012ம் ஆண்டில் அதிகமாக இருந்ததாக Jarraud தெரிவித்துள்ளார்.
கடல் மட்டங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவதால், 2013ம் ஆண்டு அதிகமான வெப்பநிலையைக் கொண்டிருக்கும் எனவும் ஐ.நா. அதிகாரி Jarraud மேலும் கூறியுள்ளார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.