2013-11-13 15:15:05

இந்தியாவில் நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கால் ஆண்டுதோறும் நான்கு இலட்சம் சிறார் இறப்பு


நவ.13,2013. நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கால் இந்தியாவில் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட நான்கு இலட்சம் சிறார் இறக்கின்றனர் என்று இந்நோய்கள் குறித்த அறிக்கை ஒன்று இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.
இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக நிமோனியா நாளன்று, நிமோனியா குறித்து அறிக்கை வெளியிட்ட IVAC என்ற பன்னாட்டு தடுப்பூசி மையம், வாழ்வைப் பாதுகாக்கும் தடுப்பூசி வசதிகள், இந்தியாவில் பல சிறாருக்கு, இன்னும் கிடைக்காமலே இருக்கின்றது என்று கூறியுள்ளது.
உலகில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறாரில் ஏறக்குறைய பாதிப்பேர் வாழ்கின்ற 15 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவிலும் நைஜீரியாவிலும் இந்த இறப்புக்கள் 4 முதல் 10 மடங்கு அதிகமாக உள்ளன என்றும் அவ்வாய்வு கூறுகிறது.
உலகில் 2012ம் ஆண்டில் மட்டும் நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கால் ஐந்து வயதுக்குட்பட்ட 17 இலட்சம் சிறார் இறந்துள்ளனர்.

ஆதாரம் : TNN







All the contents on this site are copyrighted ©.