2013-11-12 15:59:24

மாரடைப்பு வருவதை கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன் தொழில்நுட்பம்


நவ.12,2013. மாரடைப்பு வரக்கூடிய நிலையில் ஒருவர் இருக்கிறாரா என்று கண்டுபிடித்துச் சொல்லக்கூடிய ஒரு வழியை, ஏற்கனவே புற்றுநோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு ஸ்கேனிங் முறையின் மூலம், தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கதிரியக்கத்தை வைத்துக் கண்டறியும் இந்தத் தொழில்நுட்பம், இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் ஆபத்தான பொருள்கள் அடைந்து கிடந்தால் அவற்றை ஒளிரவைத்து, அதிகக் கூர்மையுள்ள ஸ்கேன்ளின் மூலம் அவைகளை மருத்துவர்கள் பார்க்க உதவுகிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்பு ஏற்பட்ட 40 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இந்த ஸ்கேன் 37 நோயாளிகளின் இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததைக் காட்டியது.
இந்த ஆய்வு முடிவுகள், லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுகின்றது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.