2013-11-09 15:34:46

பெனின் நாட்டில் பல சிறார், வன்முறை மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர், ஐ.நா. அதிகாரி


நவ.09,2013. ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் இடம்பெறும் சிறார்க்கெதிரான வன்முறையும் சுரண்டலும் அந்நாட்டில் சகித்துக் கொள்ளப்படுகின்றன, பல சூழல்களில் அவை நியாயப்படுத்தப்படுகின்றன மற்றும் இவற்றில் ஈடுபடும் பலர் தங்களின் வன்முறைச் செயல்கள் குறித்து மகிழ்கின்றனர் என்றுஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.
பெனின் நாட்டில் பல சிறார், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் அல்லது ஏழ்மை என்ற பெயரில் வன்முறை, சுரண்டல், தவறாகப் பயன்படுத்தப்படல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று சிறார் குறித்த ஐ.நா. சிறப்புத் தொடர்பாளர் Najat Maalla M’jid இவ்வெள்ளியன்று கூறினார்.
கடந்த அக்டோபர் 28 முதல் இம்மாதம் 8 வரை பெனின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து சிறாரின் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விளக்கி, அவற்றைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் Maalla M’jid.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.