2013-11-09 15:28:25

புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும், பேராயர் Fisichella


நவ.09,2013. கத்தோலிக்கத் திருஅவையில் நம்பிக்கை ஆண்டு நிறைவுறவிருக்கும்வேளையில் உரோமின் முதல் ஆயராகிய புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என, நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பதை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella அறிவித்துள்ளார்.
முதல் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை இக்காலத்திய விசுவாசிகள் மத்தியில் மீண்டும் உயிர்பெறச் செய்யும் நோக்கத்தில் புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என லொசெர்வாத்தோரே ரொமானோ நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார் பேராயர் Fisichella.
நம் ஆண்டவருக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த திருத்தூதர் புனித பேதுருவின் புனிதப் பொருள்கள் என பாரம்பரியமாக நம்பப்பட்டுவரும் அவற்றை, நம்பிக்கை ஆண்டை நிறைவு செய்யும் உச்ச நிகழ்வாக, முதன்முறையாக இவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என மேலும் கூறியுள்ளார் பேராயர் Fisichella.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கப்பட்ட நம்பிக்கை ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.

ஆதாரம் : Oss.Romano







All the contents on this site are copyrighted ©.