2013-11-08 15:33:17

கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்பட்ட மாசுக்கேடு 2012ம் ஆண்டில் அதிகம்


நவ.08,2013. வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்பட்ட மாசுக்கேடு 2012ம் ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக இருந்ததாக, ஐ.நா. வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வாகனங்கள், புகைபோக்கிகள் போன்றவை வழியாக காற்றில் வெளியேற்றப்பட்ட வெப்ப வாயுவின் அளவு கடந்த ஆண்டில் 393.1 ppm, அதாவது இலட்சத்து 393.1 என்ற அளவில் இருந்ததாகவும், இந்நிலை 2011ம் ஆண்டில் 2.2 ppm ஆக இருந்ததாகவும் ஜெனீவாவை மையமாகக் கொண்ட உலக வானிலை நிறுவனம் அறிவித்துள்ளது.
2012ம் ஆண்டில் இப்புவி மண்டலம் அதிகஅளவில் வெப்பமடைந்ததற்கு கார்பன்டை ஆக்ஸைடு வாயுவின் வெளியேற்றமே காரணமாக என்றுரைக்கும் இந்நிறுவனம், இந்நிலை நீடித்தால், 2016ம் ஆண்டில் வளிமண்டலத்தின் மாசுக்கேடு அளவு 400ppm ஆக உயரும் எனவும் கூறியுள்ளது.
சில இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கடல்மட்டங்கள் அதிகரித்தபோது, இப்பூமியின் வளிமண்டலம் இந்த அளவுக்கு கார்பன்டை ஆக்ஸைடால் பாதிக்கப்பட்டது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழிற்புரட்சிக்கு முன்னர் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு 280 ppm ஆக இருந்தது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.