2013-11-06 15:22:04

ஆயிரக்கணக்கான பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்கள் சவுதி அதிகாரிகளால் சித்ரவதை


நவ.06,2013. சவுதி அரேபியாவில் வேலை செய்யும் பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்களில் பலர் விலங்குகள் போன்று, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைகளில் பல நாள்களுக்கு அடைத்து வைக்கப்பட்டனர் என, சவுதி அரசால் வெளியேற்றப்பட்ட 30 பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்கள் கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
சரியான ஆவணங்கள் இன்றி வேலைசெய்துவந்த வெளிநாட்டவர்க்கு சவுதி அரசு அளித்திருந்த மன்னிப்புக் காலம் கடந்த ஞாயிறன்று நிறைவடைந்ததையொட்டி பிலிப்பீன்ஸ் திரும்பியுள்ள குடியேற்றதாரர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
தகுந்த ஆவணங்கள் இன்றி வேலைசெய்துவந்த குறைந்தது 6,700 பிலிப்பீன்ஸ் குடியேற்றதாரர்கள், சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமாகிய Jeddahவிலும், அந்நாட்டின் பிற நகரங்களிலும் சிறைகளில் வைக்கப்பட்டிருந்தனர் என்று பிலிப்பீன்ஸ் அரசு கணக்கிட்டுள்ளது.
தாங்கள் விலங்குகள் போன்று நடத்தப்பட்டதாக 46 வயதான வீட்டுப்பணியாளர் Amor Roxas கூறியிருக்க, தாங்கள் தப்பித்துவிடுவோம் என்ற அச்சத்தில், சவுதி அதிகாரிகள் தங்கள் கால்களைச் சங்கிலியால் கட்டிப் பூட்டுப்போட்டு வைத்திருந்தனர் என, 32 வயதான Yvonne Montefeo என்பவர் கூறியுள்ளார்.
ஏறக்குறைய 3 இலட்சம் பிலிப்பீன்ஸ் மக்கள், சவுதி அரேபியாவில் வேலை செய்கின்றனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.