2013-11-06 15:26:10

1.8 இலட்சம் அமெரிக்க டாலருக்கு மகாத்மா காந்தியின் கைராட்டினம் ஏலம்


நவ.07,2013. சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய கை நெசவு இராட்டினம் இச்செவ்வாயன்று பிரிட்டனில் ஏலம் விடப்பட்டது.
இந்த இராட்டினமே காந்தியின் சுதேசி இயக்கக் குறியீடாகவும், மிகவும் உன்னதமான பொக்கிஷமாகவும் அனைவராலும் பார்க்கப்பட்டதாகும். இது 1.8 இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது 1.11 கோடி இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏலம் போயிருக்கிறது. இந்தக் கை இராட்டினத்தை, 1935ம் ஆண்டில் அமெரிக்க மெத்தடிஸ்ட் கிறித்தவப் போதகரான Floyd A Puffer என்பவருக்கு காந்தி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தியின் உயில் மற்றும் அரிதான சில கடிதங்கள் உட்பட ஏறக்குறைய 60க்கும் மேற்பட்ட அவரது அரும் பொருட்கள் ஏலத்துக்கு வந்துள்ளன.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.