2013-11-04 14:12:46

கற்றனைத்தூறும்... ஆக்சைடுகள்


* கார்பன் மோனாக்சைடு ஒரு விஷ வாயு. அது இரத்தத்தின் சிவப்பு அணுவைப் பாதித்து மரணத்தையே கூட நிகழ்த்தலாம்.
* சல்பர் டை ஆக்சைடு, உலோகங்களை அரிக்கும் மற்றும் பளிங்குக் கற்களை அழிக்கும் தன்மை உடையது.
* மாசுகலந்த காற்றில் உள்ள நைட்ரஜன், சல்பர் ஆகியவற்றின் ஆக்சைடுகள் மழை நீரில் கரைந்து அமில மழையை ஏற்படுத்தும்.
* ஹைட்ரஜன் சல்பைடு வாயு, வெள்ளியாலான பொருட்களைச் சுருக்கச் செய்கிறது. மாசு கலந்த காற்று ஓசோன் படலத்தைத் துளைக்கிறது.
* அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு, புவிமண்டலம் சூடாகக் காரணமாகிறது.
* நிலக்கரி, பெட்ரோலியம் முதலான எரிப்பொருட்களை எரிக்கும் பொழுது பெருமளவு கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுகிறது. காடுகளை அழிப்பதாலும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது.
* காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, புவியின் பரப்பில் பிரதிபலிக்கப்பட்டு வெளிப்படும் அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சி வளிமண்டலத்தை வெப்பப்படுத்துகிறது.
* காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு இவ்வாறு வளிமண்டலத்தைச் சூடுபடுத்தும் நிகழ்விற்குப் பசுமை இல்ல விளைவு என்று பெயர். இத்தகைய பசுமை இல்ல விளைவு காரணமாக புவிப்பரப்பின் வெப்பநிலை அதிகரிக்கிறது.
* காற்றில் கலந்துள்ள மாசுக்களான சல்பர், நைட்ரஜன் ஆகியவற்றின் ஆக்சைடுகள் எளிதில் மழை நீரில் கரைந்து அமிலங்களைத் தோற்றுவிக்கின்றன. இதற்கு அமில மழை என்று பெயர்.
* அமில மழை, தாவரங்களை அழிப்பதுடன், நீர்வாழ் உயிரினங்களையும் கொல்கிறது.

ஆதாரம் : தினமணி







All the contents on this site are copyrighted ©.