2013-11-02 14:51:10

அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளைப் பல்வேறு மதத்தவரும் நினைவுகூருகின்றனர்


நவ.02,2013. கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, பல்வேறு மதத்தவரும் இறந்த அனைத்து ஆன்மாக்களை நினைவுகூருகின்றனர் என்று விளக்குகிறார் இந்திய ஊடகவியலாளர் ஒருவர்.
முஸ்லீம்கள் Shab-e-Baratயும், இந்துக்கள் Pithru Pakshaவையும் சிறப்பிக்கும்போது இறந்தவர்களை நினைவுகூருகின்றனர் என்று விளக்கும் பத்திரிகையாளர் Ivan Fernandes, புத்த மதத்தினரும், பார்சி மதத்தினரும் இறந்தவர்களை நினைவுகூர்கின்றனர் என்று கூறுகிறார்.
கிறிஸ்தவர்கள் போன்று, முஸ்லீம்களும் சமாதிகளுக்குச் சென்று மலர்களை வைத்து விளக்குகளை ஏற்றிச் செபிக்கின்றனர். இந்துக்களும் தங்கள் முன்னோர்களின் நிறைசாந்திக்காகச் செபிக்கின்றனர்.
புத்த மதத்தினரும் அனைத்துப் புனிதர்கள் நாளையும், அனைத்து ஆன்மாக்கள் நாளையும் நினைவுகூருகின்றனர் என்று விளக்குகிறார் Ivan Fernandes.
கி.பி.844ம் ஆண்டில் இறந்த திருத்தந்தை 4ம் கிரகரி, நவம்பர் முதல் தேதியை அனைத்துப் புனிதர்கள் விழாவாகவும், 1748ம் ஆண்டில் திருத்தந்தை 14ம் பெனடிக்ட், நவம்பர் இரண்டாம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாளாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.