2013-11-01 15:10:00

பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தின் கையெழுத்துப் பிரதி விரைவில் அருங்காட்சியத்தில்....


நவ.01,2013. போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தின் கையெழுத்துப் பிரதி விரைவில் அருங்காட்சியத்தில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1917ம் ஆண்டு ஜூனில், ஜசிந்தா, லூசியா, பிரான்சிஸ் ஆகிய மூன்று சிறாருக்கு பாத்திமாவில் அன்னைமரியா அறிவித்த மூன்றாவது இரகசியத்தை விளக்கும் அருள்சகோதரி லூசியாவின் கையெழுத்துப் பிரதி இம்மாதம் 30ம் தேதியன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
1957ம் ஆண்டுமுதல் இந்தப் பிரதி வத்திக்கானின் விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் சுவடிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பிரதி இதுவரை இரண்டு தடவைகள் இப்பேராயத்தைவிட்டு வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.
1981ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னர் அத்திருத்தந்தையின் வேண்டுகோளின்பேரில் இது முதலில் வெளியே கொண்டுவரப்பட்டது.
அதன்பின்னர், கர்தினால் ஜோசப் இராட்சிங்கர்(முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்) அவர்கள், 2000மாம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டு கொயம்ப்ராவில் அருள்சகோதரி லூசியாவைச் சந்தித்தபோது, இது உண்மையிலேயே அச்சகோதரியின் கையெழுத்துப் பிரதி தானா என்பதை உறுதி செய்வதற்காக அவர் இதனை எடுத்துச்சென்றார்.

ஆதாரம் : Romereports







All the contents on this site are copyrighted ©.