2013-11-01 15:07:24

டென்வர் பேராயர் : கடவுளைப் புறக்கணிப்பது மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்


நவ.01,2013. கடவுளைப் புறக்கணிப்பது அதிகரித்து வருவது, மக்களாட்சியின் அடித்தளங்களுக்கு அச்சுறுத்தலை முன்வைக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் டென்வர் பேராயர் சாமுவேல் அக்குய்லா கூறினார்.
கத்தோலிக்கர் நற்செய்தியின் உண்மையை, தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் வாழுமாறு வலியுறுத்திய பேராயர் அக்குய்லா, ஒருவர் அறிந்தோ அறியாமலோ கடவுளை ஒதுக்கி வாழும்போது, பொய்களின் மற்றும் தீயவனின் தந்தையை அணைத்துக்கொள்கிறார் என்றும் எச்சரித்தார்.
வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகளைத் தூயஆவியானவர் நிறைக்கவேண்டுமெனச் செபித்த திருப்பலியில் இவ்வாறு உரைத்த பேராயர் அக்குய்லா, இன்றைய நவீன சமுதாயத்தின் கடவுள் புறக்கணிப்பு, ஒரு தனிப்பட்ட சவாலாக இருக்கின்றது என்றும் கூறினார்.
டென்வரில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்காகத் தூயஆவியானவரின் வரம்வேண்டிச் செபிக்கும் திருப்பலி 700 ஆண்டுகால மரபைக் கொண்டுள்ளது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.