2013-10-29 15:55:12

மியான்மார் எதிர்க்கட்சித்தலைவர் திருத்தந்தையை சந்தித்தது குறித்து யங்கூன் பேராயர்


அக்.,29,2013. மியான்மார் எதிர்க்கட்சித்தலைவர் Aung San Suu Kyi அவர்கள், இத்திஙகளன்று திருத்தந்தையை சந்தித்தது, அவருக்கு பலம் மற்றும் வழிகாட்டுதலின் ஆதாரமாகஇருக்கும் எனகூறினார் யங்கூன் பேராயர் Charles Bo.

மதங்களிடையேயான பேச்ச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் Suu Kyi அவர்களுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு, மியான்மார் கத்தோலிக்கர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் மனநிறைவின் காரணமாக இருந்தது என்றார் பேராயர் Charles Bo.
மியான்மார் கத்தோலிக்கர்களால் மதிக்கப்படும் Suu Kyi அவர்களும், ஆழமான மனிதாபிமானம் உடைய திருத்தந்தையும் சந்தித்தது, எதிர்க்கட்சித்தலைவரின் மக்கள் செல்வாக்கையும் புகழையும் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் யங்கூன் பேராயர் Charles Bo.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.