2013-10-26 16:41:43

வத்திக்கானில் குடும்பங்களை மையப்படுத்திய இருநாள் கொண்டாட்டங்கள்


அக்.,26,2013. 'குடும்பமே, விசுவாசத்தின் மகிழ்வில் வாழ்வாயாக' என்றதலைப்பில் இச்சனி, மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் இரு நாள் கொண்டாட்டங்கள் உரோம் நகரில் இடம்பெற்றுவருகின்றன.
தூயபேதுருவின் கல்லறையை குடும்பங்கள் தரிசிப்பதோடு துவங்கியுள்ளஇந்தவிழாக்கொண்டாட்டங்களில் திருத்தந்தையும் பங்கேற்றுவருகிறார்.
திருப்பீடத்தின் குடும்பப்பணி அவையால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளஇந்தக் கொண்டாட்டங்களையொட்டி, சிறார்கள் தங்கள் குடும்பங்களைப்பற்றி ஓவியம் வரைந்து திருத்தந்தைக்கு அனுப்பவும், இளையோர் தங்கள் திறமைகளை, பாடல்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இச்சனிக்கிழமையன்று உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணிக்கு தியானம், இசை, சாட்சிபகர்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் துவங்கிய இந்தக் கொண்டாட்டங்களில், 4.30 மணியளவில் திருத்தந்தையும் வந்து கலந்துகொண்டார்.
இஞ்ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு செபமாலை செபித்தல், 10.30 மணிக்கு திருத்தந்தையின் திருப்பலி மற்றும் நண்பகல் மூவேளை செப உரை ஆகியவைகளுடன் குடும்பங்களூக்கான இக்கொண்டாட்டங்கள் நிறைவுக்கு வரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.