2013-10-23 17:04:54

சிரியாவில் கடத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதில் கத்தார் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை - கர்தினால் Boutros Raï


அக்.23,2013. கத்தார் அரசின் முயற்சிகளால், சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு ஆயர்களும், மூன்று அருள் பணியாளர்களும் விடுவிக்கப்படுவர் என்று தான் நம்புவதாக, மாரனைட் வழிபாட்டு முறை, முதுபெரும் தந்தை, கர்தினால் Béchara Boutros Raï அவர்கள் கூறியுள்ளார்.
கத்தார் நாட்டின் அரசுத் தலைவராக இவ்வாண்டு பொறுப்பேற்ற Sheikh Tamim bin Hamad al-Thani அவர்கள் விடுத்த அழைப்பின் பேரில், அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் Boutros Raï அவர்கள், கடத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதில் கத்தார் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் 22ம் தேதியன்று, சிரிய ஆர்த்தடாக்ஸ் ஆயர் Youhanna Ibrahim அவர்களும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆயர் Boulos Yazigi அவர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், இவ்வாண்டு ஜூலை 29ம் தேதியன்று, இயேசுசபை அருள் பணியாளர் Paolo dall'Oglio அவர்களும், அதற்கு முன்னதாக, இரு வேறு அருள் பணியாளர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்டுள்ள இந்த ஐந்து பேரைக் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.