2013-10-23 17:06:00

இந்தியாவின் அன்பியங்கள் இணைந்துவரும் தேசிய மாநாடு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெறும்


அக்.23,2013. இந்தியாவில், கத்தோலிக்கத் திருஅவையின் ஓர் அங்கமாக இயங்கிவரும் அன்பியங்கள் அனைத்தும் இணைந்துவரும் தேசிய மாநாடு ஒன்று, நவம்பர் மாதம் 19 முதல், 21ம் தேதி முடிய கோவாவின் Bom Jesus பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும், இன்னும் உலகின் ஒரு சில நாடுகளிலிருந்தும் வருகை தரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ 8000ஆக இருக்கும் என்று, இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் அருள் பணியாளர், Anthony Fernandes அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
நவம்பர் 19, செவ்வாயன்று, மாநாட்டின் துவக்கத் திருப்பலியை, இந்தியாவுக்கான திருப்பீடத் தூதர், பேராயர் Salvatore Pennacchio அவர்கள் நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 21, வியாழனன்று நடைபெறும் நிறைவுத் திருப்பலியை, இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Oswald Gracias அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்றும், அத்தருணத்தில், நம்பிக்கை ஆண்டின் நிறைவு விழா கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : TimesofIndia








All the contents on this site are copyrighted ©.