2013-10-22 16:03:48

கற்றனைத் தூறும் பூமியைவிட 2,500 மடங்கு பெரிதான ஒரு கோளம்


நமது பூமியைவிட 2,500 மடங்கு பெரிதான ஒரு கோளம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோளத்திற்கு MOA-2011-BLG-322 என்ற குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோளங்களிலும் பெரியதென கருதப்படும் Jupiter, அதாவது, வியாழன் கோளை விட எட்டு மடங்கு பெரிதாகக் கருதப்படும் இந்தக் கோளைப் பற்றிய ஆய்வுகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன.
விண்வெளியில் கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதன் முதலாக கடந்த 2011ம் ஆண்டு புளூட்டோவுக்கு அப்பால் ஒரு கோள் இருப்பது தெரிந்தது. இதைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்ட ஜப்பான், நியூசிலாந்து, போலந்து மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளிலிருந்தும் இந்த கோள் தென்பட்டது.
இதையடுத்து புதிய கோள் இருப்பதை உறுதி செய்ய ஆய்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட்ட ஆய்வின் பயனாக, பூமியிலிருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில், வியாழன் கோளைவிட எட்டு மடங்கும், பூமியைவிட 2,500 மடங்கும் பெரிதான ஒரு கோளம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : Mail Online








All the contents on this site are copyrighted ©.