2013-10-22 16:28:07

உணவுப்பொருள்கள் வீணாவதைக் குறைப்பது பசிக்கெதிரான நடவடிக்கைக்கு முக்கியம், ஐ.நா. அதிகாரி வலியுறுத்தல்


அக்.22,2013. உலக அளவில் உணவுப்பொருள்கள் இழக்கப்படுவதையும், வீணாவதையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்குப் புதிய சிந்தனை அவசியம் என்று FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத் தலைவர் கூறினார்.

உலக அளவில் உணவுப்பொருள்கள் இழக்கப்படுவதையும், வீணாவதையும் குறைப்பதுவே, பசியை ஒழிப்பதற்கான முயற்சியில் முன்னேறிச் செல்வதற்கு இன்றியமையாதவை என, FAO இயக்குனர் José Graziano da Silva அவர்கள், Copenhagen நகரில் நடைபெறும் கூட்டத்தில் தெரிவித்தார்.

மனிதப் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்படும் உணவில் மூன்றில் ஒரு பகுதி, அதாவது ஏறக்குறைய 130 கோடி டன்கள் வீணாக்கப்படுகின்றன எனவும், இது ஆண்டுக்கு ஏறக்குறைய 750 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்துகின்றது எனவும் கூறினார் Graziano da Silva.

உணவுப்பொருள்கள் வீணாவதைக் குறைத்தால், மேலும் 200 கோடிப் பேருக்கு உணவளிக்க முடியும் என்றும் கூறினார் Graziano da Silva. உலக வளங்கள் நிறுவனம்(WRI), உலக உணவு உற்பத்தி குறித்த கூட்டத்தில், உணவுப்பொருள்கள் வீணாவதைக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து உணவுப்பொருள்கள் இழக்கப்படுவதையும், வீணாவதையும் குறைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது FAO நிறுவனம்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.