2013-10-19 16:14:38

விசுவாசம் மக்களை ஒன்றிணைக்கும் கூறு,Sambalpur ஆயர்


அக்.19,2013. விசுவாசம் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு கூறு, ஆயினும் இது பிற மதத்தவருடன் உரையாடல் வழியாகப் பகிரப்படும்போது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருகிறது என்று ஒடிசாவின் Sambalpur ஆயர் Sual Niranjan Singh கூறியுள்ளார்.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு ஞாயிறையொட்டி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட ஆயர் Niranjan Singh, விசுவாசம் அன்பினால் உறுதிப்படுத்தப்படுகின்றது, அது பிறரோடு பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளும், அவரது எடுத்துக்காட்டான வாழ்வும் தனது ஆயர் பணிக்கு மிகவும் உதவுகின்றன என்றுரைத்துள்ள Sambalpur ஆயர், விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அது உலகத்தை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோள், உலக மறைபரப்பு ஞாயிறைச் சிறப்பிக்க ஊக்கமளிக்கின்றது என்றும் கூறினார்.
2011ம் ஆண்டின் அறிக்கையின்படி இவ்வுலகில் 1,213,591,000 கத்தோலிக்கர் உள்ளனர்

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.