2013-10-19 16:21:02

வறுமையை ஒழிக்க நைஜீரியத் திருஅவைக்கு அழைப்பு


அக்.19,2013. அனைத்து மக்களுக்கும், குறிப்பாக இளையோர்க்கு வேலைவாய்ப்பை வழங்கும் பொருளாதார வளர்ச்சியே, ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்று நைஜீரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
நைஜீரிய அரசு சமர்ப்பித்துள்ள பொருளாதரம் குறித்த புள்ளி விபர அறிக்கையில், தேசிய வளமை அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், பெருமளவான நைஜீரியர்களின் வாழ்க்கைத் தரங்கள் முன்னேறியுள்ளன என்று, இதை வைத்து பொருள்கொள்ள முடியாது என்று அந்நாட்டு ஆயர்களின் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்பணி Evaristus Bassey கூறினார்.
நைஜீரியாவின் பொருளாதார அறிக்கை குறித்து அபுஜா நகரின் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அருள்பணி Bassey, வேலைவாய்ப்புக்களை ஊக்கப்படுத்தும் கொள்கைகளை அரசு அதிகாரிகள் பின்பற்றினால் திருஅவையும் தனது பங்குக்குச் செய்யவேண்டியதைச் செய்யும் என்றும் கூறினார்.
ஒவ்வொரு வாரமும் பல ஆலயங்களில் எடுக்கப்படும் உண்டியலில் ஒரு பகுதி அந்நாட்டில் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படுமாறும் அருள்பணி Bassey பரிந்துரைத்தார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.