2013-10-19 16:19:29

உலக அளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிப்பு, புதிய ஆய்வு


அக்.19,2013. உலக அளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதிகமாகியிருக்கின்றன என்று மத சுதந்திரம் குறித்த புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்தின் பிரித்தானிய கிளை முப்பது நாடுகளில் மத சுதந்திரம் குறித்து ஆய்வு நடத்தி இவ்வாரத்தில் வெளியிட்டுள்ள 192 பக்க அறிக்கையில், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் சில நாடுகளில் தேசியவாத சமயக் குழுக்களால் மிகவும் துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவிலுள்ள கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் துன்புறுவது தவிர, கம்யூனிச, மார்க்சீய அல்லது முன்னாள் கம்யூனிச நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்தியா, இலங்கை, மியான்மார் ஆகிய நாடுகளிலும் கிறிஸ்தவர்கள், பெரும்பான்மை இந்து அல்லது புத்தமதத்தினரால் அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.