2013-10-15 16:31:16

உலகில் பசியால் வாடுவோரில் 25 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனர், GHI அறிக்கை


அக்.15,2013. உலகில் தானிய உற்பத்தி அதிகரித்திருந்தாலும், உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 84 கோடியே 20 இலட்சமாக உள்ளது என்றும், இவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் அதாவது 21 கோடிப் பேர் இந்தியாவில் உள்ளனர் என்றும் இத்திங்களன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.
2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை உலகில் பசியால் வாடுபவர்கள் குறித்து GHI என்ற உலக உணவு உற்பத்தி கழகம் நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தானிய உற்பத்தி 2,489 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்திருப்பதாக அண்மையில் அறிக்கை ஒன்று வெளியானது, ஆயினும், உலகம் முழுவதும் 84 கோடியே 20 இலட்சம் மக்கள் பசியால் வாடிவருவது தெரிய வந்துள்ளதாக GHI கழகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
இருப்பினும், 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரையிலான நிலைமையோடு ஒப்பிடும்போது, உலகில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 87 கோடியிலிருந்து, தற்போது 84 கோடியே 20 இலட்சமாகக் குறைந்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : TNN







All the contents on this site are copyrighted ©.