2013-10-12 15:58:57

எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து நியாயமான தேர்தல்களை நடத்த Honduras ஆயர்கள் பரிந்துரை


அக்.12,2013. மத்திய அமெரிக்க நாடான Hondurasல் பொதுத் தேர்தல்கள் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளவேளை, குடிமக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லுமாறு கேட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
வருகிற நவம்பர் 24ம் தேதியன்று நடைபெறவுள்ள தேர்தல் சுதந்திரமாகவும், கடமையுணர்வோடும் இடம்பெற வேண்டுமெனக் கேட்டுள்ள ஆயர்கள், இத்தேர்தல் நியாயமான நல்லிணக்க வாழ்வுக்கு உறுதியளிக்கும் என்பதை அறிந்தவர்களாய், வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை விற்காமல் இருக்குமாறும் கூறியுள்ளனர்.
வாக்காளர்கள் விழிப்புடன் இருந்து, தேர்தல் சமயத்தில் இடம்பெறும் ஏமாற்று அல்லது சட்டத்துக்குப் புறம்பேயான செயல்கள் குறித்து அறிவிக்கவும், அச்செயல்களைக் குறைக்கவும் துணிச்சலைக் கொண்டிருக்குமாறும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
மேலும், திருப்பீடத்துக்கான Honduras நாட்டுப் புதிய தூதர் Carlos ÁVILA MOLINA அவர்கள், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் நம்பிக்கைச் சான்றிதழைச் சமர்ப்பித்தார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.