2013-10-12 16:04:16

இவ்வுலகில் 350 கோடிப் பேருக்கு கழிவுப்பொருள்களை நிர்வகிக்கும் வசதிகள் இல்லை, UNEP


அக்.12,2013. இவ்வுலகில் ஏறக்குறைய 350 கோடிப் பேருக்கு கழிவுப்பொருள்களை நிர்வகிக்கும் வசதிகள் இல்லாததால், அவர்கள் சுற்றுச்சூழலுக்கும், நலவாழ்வுக்கும், பொருளாதாரங்களுக்கும் குறிப்பிடத்தக்க வகையில் சேதத்தை உண்டுபண்ணுகின்றனர் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட நிறுவனம்(UNEP) கூறியுள்ளது.
பல நாடுகளில் கழிவுப்பொருள்கள், பொதுவான இடங்களில் கொட்டப்படுவதால், அக்குப்பைமேடுகளுக்கு அருகில் வாழ்வோர், குறிப்பாக, நகரப்புற ஏழைகள் கடும் நலவாழ்வுப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒரு டன் அலுமினியத்தை மறுசுழற்சி செய்வதால், 1.3 டன் பாக்ஸைட்டு துணுக்குகளிலிருந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்ற முடியும் எனக்கூறும் அந்நிறுவனம், மறுசுழற்சி செய்யும் பணியினால் 2000மாம் ஆண்டில் 2,29,200க்கு அதிகமானோருக்கு ஐரோப்பிய சமுதாய அவை வேலை கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.