2013-10-08 15:35:44

தென் கொரியத் தலத்திருஅவையின் மாபெரும் வளர்ச்சிக்கு கர்தினால் Filoni பாராட்டு


அக்.08,2013. தென் கொரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தலத்திருஅவை அடைந்துவரும் மாபெரும் வளர்ச்சிக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் திருப்பீட நற்செய்திஅறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.
கொரியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கர்தினால் Filoni அந்நாட்டின் பொதுநிலையினர் மற்றும் குருத்துவமாணவர்களைச் சந்தித்தபோது, இவ்வாறு பாராட்டியதோடு, அப்பொதுநிலையினர் எதிர்நோக்கும் மூன்று அச்சுறுத்தல்களையும் குறிப்பிட்டார்.
தென் கொரியாவில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், உலகாதயுப்போக்கு, பொருளியக்கோட்பாடு, அதிவேக தொழில்நுட்பவளர்ச்சி ஆகியவை குறித்து அம்மக்கள் எச்சரிக்கையாய் இருக்குமாறு கேட்டுக்கொண்ட கர்தினால் Filoni, தனிப்பட்ட அல்லது சமூக நிலையில், கிறிஸ்துவின் நற்செய்திக்குப் பிரமாணிக்கமாய் இருந்து உறுதியான சாட்சிய வாழ்வு வாழவில்லையெனில் திருஅவை தனது சாரத்தை இழக்கும் எனக் கூறியுள்ளார்.
கொரியாவில் 1949ம் ஆண்டில் 1.1 விழுக்காடாக இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை தற்போது 10.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.