2013-10-08 15:40:40

உத்ராகாண்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய்ச் செலவில் இந்திய காரித்தாசின் புனர்வாழ்வுத் திட்டங்கள்


அக்.08,2013. இந்தியாவின் உத்ராகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய்ச் செலவில் புனர்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது இந்திய காரித்தாஸ்.
உத்ராகாண்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளையும், ஏறக்குறைய ஆயிரம் சிறாருக்கும், அவர்கள் வாழும் சமூகத்துக்கும் கல்வி மற்றும் நலவாழ்வு வசதிகளையும் செய்துகொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Frederick D’Souza கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் சமூகநல அமைப்பான இந்திய காரித்தாசின் இத்திட்டமானது, உத்ராகாண்ட்டின் கருணா சமூகநலக் கழகம் மற்றும் ATI என்ற இந்திய தொழில்நுட்ப அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்படும் எனவும் அருள்பணி D’Souza கூறினார்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.