2013-10-07 16:45:03

யாழ் மாவட்டத்தில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து, அரசு தகவல்


அக்.07,2013. யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுநீராக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுவரை வடமத்திய மாநிலத்திலேயே சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது எனத் தெரிவிக்கும் நல அமைச்சகம், அங்கு 16 ஆயிரத்து 442 பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறுகிறது..
இந்த நோயாளிகளுள் 12 ஆயிரத்து 210 பேர் அனுராதபுரத்திலும் 4 ஆயிரத்து 232 பேர் பொலன்நறுவையிலும் உள்ளதாக நல அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வேதியக் கிருமி நாசினிகள், வேதிய உரம் போன்றவைகள் சிறுநீரக நோய் ஏற்படக் காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.