2013-10-07 16:40:32

தங்கள் விசுவாசத்தை மறுதலிக்க மறுப்போர் ஊரைவிட்டு வெளியேற்றப்படுவர் என்கிறார் பங்களாதேஷ் கிராம அதிகாரி


அக்.07,2013. பங்களாதேசின் மத்தியப்பகுதியில் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவசபைக் கோவிலின் கட்டுமானப்பணிகளைத் தடுத்து நிறுத்தியுள்ள அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர், கிறிஸ்தவத்தை மறுதலிக்க மறுப்போர் ஊரைவிட்டு வெளியேற்றப்படுவர் என மிரட்டியுள்ளார்.
Bilbathuagani என்ற கிராமத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கென செப்டம்பர் மாதம் 8ம் தேதி 25 எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையினர் இணைந்து துவக்கிய கோவில் கட்டுமானப்பணிகளை நிறுத்தியதோடு, கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய மசூதியில் சென்றே வழிபடவேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியுள்ளார் கிராம அதிகாரி Rafiqul Islam Faruk.
Bilbathuagani கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மறுதலிக்க வில்லையெனில் ஊரைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அவர்.

ஆதாரம் : ANS








All the contents on this site are copyrighted ©.