2013-10-04 16:54:47

கற்றனைத்தூறும் ... சில தகவல்கள்


மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் தடையற்றுப் பறக்கும் ஒரு ஜெட் விமானம் பூமியிலிருந்து சூரியனைச் சென்றடைய 17ஆண்டுகள் ஆகும்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆலமரம் கொல்கத்தா தாவரவியல் தோட்டத்தில் உள்ளது.
டமான்டுவா என்ற விலங்கு தன் குட்டியை எப்போதும் தன் முதுகிலேயே சுமந்து செல்லும். எவ்வளவு உயரமான மரத்திலும் வெகு விரைவாக அது ஏறிவிடும்.
உலகிலேயே சிலைகளை அதிகம் கொண்ட கோவில் மதுரை மீனாட்சியம்மன் கோவில். இங்கு 33,000சிலைகள் உள்ளன.
உலகிலேயே மிக நீண்ட பிரகாரம், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம் ஆகும்.
மிக நீளமாக வளரும் செடி - பிரம்புச்செடி
கருப்புத் தங்கம் என்றழைக்கப்படுவது - மிளகு
கோள்களில் சிறியது - புளூட்டோ, பெரியது - ஜூப்பிடர்
நாம் வாழும் இந்தப் பூமியே ஒரு காந்தம் என முதலில் குறிப்பிட்டவர் – வில்லியம் கில்பர்ட்
கிழக்கிந்திய ஸ்காட்லாந்து எனப்படுவது - மேகாலயா

ஆதாரம்:முத்தமிழ் மன்றம்








All the contents on this site are copyrighted ©.