2013-10-02 16:02:17

கொரியாவில் கர்தினால் Filoni அவர்களின் மேய்ப்புப்பணி பயணம்


அக்.02,2013. பிற நாடுகளிலிருந்து கொரியாவுக்கு மறைபணியாற்ற வந்தவர்களை எண்ணி நன்றி கூறும் வேளையில், கொரியத் திருஅவைப் பணியாளர்கள், ஏனைய நாடுகளுக்குச் சென்று பணியாற்றும் நிலை உருவாகியுள்ளதற்காகவும் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும் என்று Seoul பேராயர் Andrew Yeom Soo-jung அவர்கள் கூறினார்.
செப்டம்பர் 30, இத்திங்கள் முதல், அக்டோபர் 6 வருகிற ஞாயிறு முடிய கொரியாவில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்களை வரவேற்றுப் பேசிய பேராயர் Soo-jung அவர்கள் இவ்வாறு கூறினார்.
50 இலட்சம் கத்தோலிக்கர்கள் வாழும் தென் கொரியாவில், 16 மறைமாவட்டங்கள் உள்ளன என்றும், Seoul உயர் மறைமாவட்டம் கத்தோலிக்க மக்கள் எண்ணிக்கையில், உலக அளவில் தனியிடம் வகிக்கிறது என்றும் பேராயர் Soo-jung அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
தென் கொரியாவில், Suwon மறைமாவட்டம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள கர்தினால் Filoni அவர்கள் அந்நாட்டிற்குச் சென்றுள்ளார்.
அக்டோபர் 2, இப்புதனன்று கோரிய ஆயர்கள் பேரவையைச் சந்தித்த கர்தினால் Filoni அவர்கள், தென் கோரிய அரசுத்தலைவர் Park Geun-hye அவர்களையும் சந்திக்கவுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides / Zenit








All the contents on this site are copyrighted ©.