2013-10-02 16:02:26

Boko Haram அடிப்படைவாதக் குழுவினரின் கோபத்திற்கு, இஸ்லாமியரும் இலக்காகி வருகின்றனர் - நைஜீரியப் பேராயர் Kaigama


அக்.02,2013. கிறிஸ்தவர்களைத் தாக்குதல் என்பதை, தன் ஆரம்ப இலக்காகக் கொண்டிருந்த Boko Haram அடிப்படைவாதக் குழுவினரின் கோபத்திற்கு, அண்மைக் காலங்களில் இஸ்லாமியரும் இலக்காகி வருகின்றனர் என்று ஆப்ரிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
வட நைஜீரியாவின் Gujba என்ற இடத்தில், வேளாண்மைக் கல்லூரி ஒன்றில், Boko Haram குழுவினர் நடத்திய வன்முறைத் தாக்குதல் குறித்து Fides செய்திக்குப் பேட்டியளித்த நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
வேளாண்மைக் கல்லூரியில் நடைபெற்றத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 40க்கும் அதிகமானோர் இஸ்லாமிய மாணவர்கள் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
அண்மையில் நைரோபியில் Westgate என்ற வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களுடன் இத்தாக்குதலையும் ஒப்பிட்டு, நைஜீரிய அரசுத்தலைவர், Goodluck Jonathan அவர்கள் வழங்கிய தொலைகாட்சி உரையில், கொலை செய்வது ஒன்றையே கொள்கையாகக் கொண்டுள்ள Boko Haram குழுவை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.