2013-09-30 17:14:15

எந்த ஒரு மதத்தின் விழுமியங்கள் வழியாகவும் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கமுடியாது - திருத்தந்தை


செப்.30,2013. மதத் தலைவர்கள் அனைவரும் அமைதிக்காக செபிக்க முன்வரவேண்டும், அதில் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் இருப்பதாக அல்லாமல், ஒருவர் அருகில் மற்றவர் நின்று ஒத்துழைக்கும் உழைப்பாளர்களாக இருக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
San Edigio என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் அங்கத்தினர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து, உரைவழங்கியத் திருத்தந்தை, ஒரு சிலரின் மனங்களை சிறைப்படுத்தியிருக்கும் வன்முறை, பலரின் வாழ்வை அழிக்க நாம் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்.
வன்முறை எவ்வழிகளில் வெளிப்படுத்தப்பட்டாலும், அதற்கு எந்நாளும் எந்த ஒரு மதத்தின் விழுமியங்கள் வழியாகவும், நியாயம் கற்பிக்கமுடியாது என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்காக உழைப்பதும், செபிப்பதும் ஒவ்வொருவரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.