2013-09-28 15:35:06

புவி வெப்பமடைதலின் தாக்கத்திலிருந்து எவரும் தப்ப முடியாது, அறிவியலாளர்கள் எச்சரிக்கை


செப்.,28,2013. இப்புவி வெப்பமடைவதற்கு 1950களிலிருந்து மிக முக்கிய காரணியாக மனிதர் இருந்து வருகின்றனர் என்பதை 95 விழுக்காடு உறுதியாகச் சொல்லலாம் என அறிவியலாளர்கள் கூறுவதாக ஒரு புதிய அறிக்கை எச்சரிக்கின்றது.
வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. குழு நடத்திய விவாதமேடை ஒன்றில் அறிவியலாளர்கள் ஆதாரங்களுடன் இதனை விளக்கியுள்ளனர்.
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாயுக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டால் வெப்பநிலை மாற்றம் தொடர்ந்து இடம்பெற்று வெப்பநிலை அமைப்பின் அனைத்துக்கூறுகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புவி வெப்பமடைதலின் தாக்கத்திலிருந்து எவரும் தப்ப முடியாது எனவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.