2013-09-23 16:11:30

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அந்நாட்டு மதத்தலைவர்கள் கண்டனம்


செப்.23,2013. வடபாகிஸ்தானில் இடம்பெற்றஇத்தாக்குதல் குறித்து அந்நாட்டின் கத்தோலிக்கஆயர் பேரவையும், பல்வேறு கிறிஸ்தவசபைகளும், இஸ்லாமியதலைவர்களும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இத்தகையவெட்கத்துக்குரியகோழைத்தனமானதாக்குதல் குறித்து கண்டனத்தை வெளியிட்டபாகிஸ்தான் கத்தோலிக்கஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Joseph Coutts அவர்கள், இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக, இத்திங்கள் முதல் புதன் முடிய மூன்று நாட்களும் அந்நாட்டின் அனைத்து கிறிஸ்தவப்பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவித்தார்.
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக இஸ்லாமாபாத் ராவல்பிண்டி ஆயர் Rufin Anthonyயும், Ulema இஸ்லாமிய அவைத் தலைவர் Maulana Tahir Ashrafiயும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்கக் குண்டுவீச்சூக்குப் பதிலடியாக இத்தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தானின் தாலிபான் பிரிவு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.